அக்கரைப்பற்றில் இருந்து கொழும்புக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பஸ்வண்டியை நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு பொலிஸார் மடக்கி பிடித்து அதில் பிரயாணித்த 48 பேரை கைது செய்துள்ளனர்.
பயணக்கட்டுப்பாட்டை மீறி குறித்த பஸ்வண்டியை சம்பவதினமான நேற்று இரவு இங்கினியாகல நாமல் ஓயா வீதியில் பிரயாணித்த தனியார் பஸ்வண்டியை பொலிசார் நிறுத்தி சோதனையிட்டபோது அவர்கள் பயணக்கட்டுப்பாட்டு தடையை மீறி கொழும்புக்கு செல்லவதாக கண்டறிந்தனர்.
00000
இதனையடுத்து குறித்த பஸ்வண்டியில் பிரயாணம் செய்த பஸ்வண்டி சாரதி நடத்துனர் உட்பட அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த 48 பேரை கைது செய்துள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்களை அம்பாறை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இங்கினியாகல பொலிஸார் தெரிவித்தனர்.
Tags:
sri lanka news
