யாழ். இந்திய துணைத்தூதுவராக ராகேஷ் நடராஜ் புதிதாக நியமிக்கப் பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
இந்தியத்துணைத்தூதராக தற்போது பணியில் இருக்கும் சங்கர் பாலச்சந்திரன் கடந்த மே மாதம் 13ம் திகதி இந்திய வெளிவிவகார அமைச்சின் ஊடாக வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை வாயிலாக தென் அமெரிக்காவின் இந்திய வமிசாவளி மக்கள் செறிந்து வாழும் சூரினாம் நாட்டிற்கு இந்தியாவின் அடுத்த தூதராக நியமிக்கப்பட்டிருந்த செய்தி வெளியாகி இருந்தது.
ஆனால் அவரிடத்தில் யாரும் நியமிக்கப்படாமல் இருந்த நிலையில் கண்டி துணைத் தூதுவராலயத்தில் உதவி ஆணையாளராக பணியாற்றும் ராகேஷ் நடராஜ் அவர்கள் யாழ் இந்திய துணைத்தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அடுத்த மாதம் அளவில் சூரினாம் நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ள சங்கர் பாலச்சந்திரன் கடந்த மூன்று ஆண்டுகள் நன்கு மாதங்களாக யாழில் இந்திய துணைத்தூதராக பணியாற்றியதுடன் இந்திய அரசாங்கத்தினூடான பல்வேறு வேலைத்திட்டங்களிலும் பங்கெடுத்துள்ளார்.
இவர் சூரினாம் நாட்டிற்கு தூதராக (Ambassador)நியமிக்கப்பட்டதுடன் மட்டுமின்றி கரீபியன் நாடுகளான பார்படோஸ், செயின்ட் லூசியா மற்றும் செயின்ட் வின்சென்ட் & தி கிரெனேடின்ஸ் போன்ற மூன்று நாடுகளுக்கும் இணைத்து முதன் முதலாக உயர் ஆணையாளராக. (High Commissioner) பணியாற்றும் வாய்ப்பை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்.தர்மினி.
