சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நோயாளர் விடுதியின் மேற்கூரையிலிருந்து புறா எச்சங்கள் கொட்டுவதால் நோயாளர்கள் பல அசௌகரியங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.
அது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் மேல்தள கூரையையின் உள்ளே "லெவல் சீட்டுக்குள்' புறாக்கள் வசிக்கின்றன. அவற்றின் எச்சங்கள் "லெவல் சீட்டுக்குள்" சேர்ந்துள்ளன. அவை சீட்டின் இடைவெளிகள் ஊடாக நோயாளர்களின் கட்டில்களில் விழுகின்றன.
இதனால் நோயாளர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருவதனால் குறித்த விடயம் தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்காது அசமந்தமாக உள்ளதாக குற்றம் சாட்டப்படுகின்றது.
