Saturday, 12 June 2021

உங்க வேலைய பாருங்க... ரசிகருக்கு பதிலடி கொடுத்த வனிதா விஜயகுமார்..!!!

SHARE




நடிகை வனிதா விஜயகுமார் சமீபத்தில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ’தான் இப்போது சிங்கிள் என்றும் ’அவைலபிள்’ என்றும் குறிப்பிட்டு தனது திருமணம் குறித்து வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று தெரிவித்திருந்தார். இதற்கு கமெண்ட் செய்த நெட்டிசன் ஒருவர் ’அவைலபிள்’ என்ற வார்த்தை தேவையா? என்றும் உங்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள் என்பதை ஞாபகம் வைத்துக் கொண்டு இனிமேலாவது இதுபோன்ற அசிங்கத்தை நிறுத்தி விடுங்கள் என்று கமெண்ட் செய்திருந்தார்.

அதற்கு பதிலடி கொடுத்த வனிதா விஜயகுமார் ’நாங்கள் அனைவரும் வளர்ந்து வருகிறோம், எங்கள் வாழ்க்கையை பார்த்துக் கொள்ள எங்களுக்கு தெரியும். எங்கள் கடமை என்ன என்பதும் தெரியும். எங்களுக்கு தேவைப்படும் போது நீங்கள் வந்து உதவி செய்யப் போகிறீர்களா? உங்களுடைய வாழ்க்கை எதுவோ அதை நீங்கள் வாழ்ந்து கொள்ளுங்கள். நான் ஒரு நடிகை, என் நடிப்பு பிடித்திருந்தால் என் படங்களை பாருங்கள், மற்றபடி உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள்’ என்று பதிவு செய்திருக்கிறார்.

SHARE