ராஜமெளலி, ஷங்கரை கைவசம் வைத்திருக்கும் பாலிவுட் தயாரிப்பு நிறுவனம்..!!!


பாலிவுட்டின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம் பென் ஸ்டுடியோஸ். சொல்லப்போனால், இப்போதைக்கு பாலிவுட்டின் மிகப்பெரிய பட்ஜெட் படங்களை இந்த நிறுவனம் தான் கைவசம் வைத்திருக்கிறது. ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் அந்தப் படங்களின் பட்டியலை பார்க்கலாம்.

முதல் படம், ரஞ்சித் திவாரி இயக்கத்தில் அக்ஷய் குமார், வாணி கபூர், ஹூமா குரேஷி, லாரா தத்தா நடித்திருக்கும் `பெல்பாட்டம்'. இந்தப் படம் ஜூலை 27ம் தேதி வெளியாக இருக்கிறது.

அடுத்து, ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், அலியாபட் உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் `ஆர்.ஆர்.ஆர்.`. இந்தப் படத்தை இந்தியில் வாங்கி வெளியிடுகிறது. இப்படம் வருகிற அக்டோபர் 13-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

மூன்றாவது, சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் அலியா பட் லீட் ரோலில் நடிக்க உருவாகியிருக்கும் `கங்குபாய்'. இந்தப் படம் ஜூலை 30-ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.

இதற்கடுத்து, லக்ஷ்ய ராஜ் ஆனந்த் இயக்கத்தில் ஜான் ஆப்ரகாம், ரகுல் ப்ரீத் சிங், ஜாகுலின் ஃபெர்னாண்டஸ் நடிப்பில் உருவாகியிருக்கும் `அட்டாக்'. இது ஆகஸ்ட் 13-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இறுதியாக, இயக்குநர் ஷங்கரின் படைப்பில் ரன்வீர் சிங் நடிக்கும் அந்நியன் படத்தின் இந்தி ரீமேக். இப்படத்தையும் பென் ஸ்டுடியோஸ் நிறுவனம் தான் தயாரிக்கிறது.

மற்றுமொரு முக்கிய தகவல் என்னவென்றால், இந்த ஐந்து படங்களும் நேரடியாக திரையரங்கில் மட்டுமே வெளியிட தயாரிப்புத் தரப்பு தீவிரம் காட்டிவருகிறது. ஒடிடியில் வெளியிடுவது நிச்சயம் சாத்தியமில்லை. ஏனெனில், அனைத்துப் படங்களுமே பெரிய பட்ஜெட்டில் உருவாவதால் திரையரங்க ரிலீஸ் மட்டுமே சாத்தியம்.

Previous Post Next Post


Put your ad code here