எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் அபாயகரமான இரசாயனங்கள்; மறைக்கப்பட்ட உண்மைகள்..!!!


இலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான எம்.வி எக்ஸ்பிரஸ் கப்பல், அபாயகரமான இரசாயன பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் குறித்த தகவல்களை மறைத்து பயணத்தை மேற்கொண்டதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தீக்கிரையான நிலையில் மூழ்கும் கப்பலின் அடிப்பகுதியல் காணப்படும் பொருட்கள் மற்றும் எண்ணெய் கசிவுகள் குறித்து ஆராய்வதற்காக ஆழ் கடல் சுழியோடிகளின் பிரசன்னம் குறிப்பிட்டளவு தடுக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்புக்கு அருகே ஐந்து அபாயகரமான இரசாயன பொருட்கள் மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களுடன் விபத்துக்குள்ளான எம்.வி எக்ஸ்-பிரஸ் பேர்ள் வணிகக் கப்பல் கடலில் மூழ்கியுள்ளதோடு, இந்ந நிலைமையானது இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளதாக எகனமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சீனாவில் தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகின்ற இந்த கப்பல் கொழும்பு துறைமுகத்திற்குள் நுழையும் நோக்கில் நங்கூரமிடப்பட்ட நிலையில் கடற்பரப்பில் விபத்துக்குள்ளானது. கப்பலில் இருந்த அபாயகரமான இரசாயன பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் குறித்த தகவல்கள் மறைத்து எடுத்துச் செல்லப்பட்டதா என்ற சந்தேகநிலை தோற்று வித்துள்ளது.


ஏனெனில் மூழ்கும் கப்பலின் அடிப்பகுதியல் காணப்படும் பொருட்கள் மற்றும் எண்ணெய் கசிவுகள் குறித்து ஆராய்வதற்காக ஆழ்கடல் சுழியோடிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தியது மாத்திரமன்றி, பாதுகாப்பு தொடர்பான அச்சத்தையும் தோற்றுவித்தள்ளதாகவும், இதனை உள்நாட்டு மக்கள் அறிந்துகொண்டுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கப்பல் வங்காள விரிகுடா மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதி வழியாக கொண்டு செல்ல திட்டமிட்டிருந்த பெருந்தொகை இரசாயனங்கள் குறித்தும் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில், இலங்கையின் அனுமதியின்றி கதிரியக்க பொருட்களுடன் சீன கப்பலொன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் நுழைந்த விடயத்தையும், பின்னர் இலங்கை அரசாங்கம் உடனடியாக அந்தக் கப்பலை வெளியேற்றிய விடயத்தையும் எகனமிக் டைம்ஸ் நினைவூட்டியுள்ளது.

இந்த பிராந்தியத்தில் சீனாவின் இவ்வகையான நகர்வுகள் குறித்து கொழும்பை தளமாகக் கொண்ட அதிகாரிகள் ஆச்சரியத்தை வெளியிட்டுள்ளனர். சீனாவின் ஜுஷான் சாங்ஹோங் இன்டர்நேஷனல் ஷிப்யார்ட் லிமிடெட் என்ற நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட எம்.வி எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் கடலில் மூழ்கியுள்ள நிலையில் அதன் தரம் குறித்த தற்போது கேள்விகள் எழுந்துள்ளன.

மே 19ஆம் திகதி இலங்கைக்கு வருவதற்கு முன்பு நைட்ரிக் அமிலம் கசிந்ததாகவும் அதில் மேலும் சில ஆபத்தான பொருட்கள் காணப்படுவதாகவும் தகவல் அளித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மே 25 திகதி கப்பலில் வெடிப்பு ஏற்பட்டது எனவும், கப்பலில் இருந்த ஐந்து இந்திய பணியாளர்கள் இலங்கை அதிகாரிகள் மற்றும் கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்துடனும் தொடர்பிலிருந்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஜூன் முதலாம் திகதி தீ பரவல் முழு அளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தபோதிலும் மறுநாள் கப்பல் மூழ்கியதோடு, இந்த கப்பில் 25 தொன் நைட்ரிக் அமிலம் மற்றும் பிற இரசாயனங்களை பொருட்கள் காணப்பட்டுள்ளதாக, எக்னமிக் டைமஸின் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Previous Post Next Post


Put your ad code here