உலக சந்தையில் விலை உயர்வடைந்துள்ளது எனக் கூறி உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை அதிகரிக்க எரிவாயு நிறுவனங்கள் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
லாஃப்ஃப்ஸ் எரிவாயு சிலிண்டருக்கு 540 ரூபாயினால் உயர்த்துமாறு கோரியுள்ளது. அதே நேரத்தில் லிட்ரோ எரிவாயு தங்கள் சிலிண்டரை 580 ரூபாயால் உயர்த்த முன்மொழியப்பட்டது.
விலை உயர்வுக்கான நிறுவனங்களின் கோரிக்கையை ஆராய வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன ஐந்து உறுப்பினர்களை கொண்ட குழுவை நியமித்துள்ளார்.
எரிபொருள் விலையை 6-14 சதவீதம் அதிகரிக்க அரசு நேற்று அனுமதித்தமை குறிப்பிடத்தக்கது
Tags:
sri lanka news