இலங்கைக்கு அருகில் மற்றுமொரு கப்பலில் தீ..!!!



இலங்கைக்கு அருகில் கடற்பரப்பில் மற்றுமொரு கப்பல் தீப்பரவலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பில் இருந்து சிங்கபூர் நோக்கி பயணித்த ‘எம்எஸ்சி மெஸ்சினா’ என்ற கப்பல் ஒன்றிலேயே இவ்வாறு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

குறித்த கப்பலின் இயந்திர அறையில் தீ ஏற்பட்டுள்ள நிலையில், தீயை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மஹரவான வெளிச்சவீட்டுக்கு கிழக்கே 480 கடல்மைல் தூரத்தில் பயணித்த கப்பலின் இயந்திர அறையில் தீ பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கொழும்பிலிருந்து - சிங்கப்பூர் நோக்கிச் பயணித்துக் கொண்டிருந்த எம்.எஸ்.சி. மெஸ்சினா என்ற சரக்கு கப்பலில் ஏற்பட்டுள்ள தீப்பரவலை கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் கெப்ட்டன் இந்திக டி சில்வா தெரிவித்தார்.

கொழும்பிலிருந்து சிங்கப்பூர் நோக்கி பயணித்த எம்.எஸ்.சி.மெஸ்சினா சரக்கு கப்பலின் இயந்திரப்பகுதியில் நேற்று இரவு தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக எமக்கு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் , கிரிந்தை - மஹா இராவணன் கலங்கரை விளக்கத்திலிருந்து 480 கடல்மைல் தொலைவில் வைத்தே கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

அதற்கமைய , எம்.எஸ்.சி.மெஸ்சினா கப்பலில் ஏற்பட்டுள்ள தீப்பரவல் தொடர்பில் , அந்த கடல்மார்க்கமாக பயணிக்கும் ஏனைய சரக்கு கப்பல்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், எம்.எஸ்.சி.மெஸ்சினா கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்காக அவர்கள் உதவிகளை செய்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது தீப்பரவல் ஏற்பட்டுள்ள கப்பலில் உள்ளவர்களுக்கு தேவையான ஏனைய வசதிகளையும் செய்துக் கொடுக்குமாறு அங்குள்ள , சரக்கு கப்பலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய கப்பல் தொடர்பில் தற்போது வரையில் கிடைக்கப் பெற்றுள்ள தகவலுக்கமைய தீப்பரவலை கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
Previous Post Next Post


Put your ad code here