நவகிரகங்களின் ராஜாவாக திகழும் சூரியன், சந்திரனின் வீடான கடகத்தில் சஞ்சாரம் செய்யக்கூடிய அற்புத மாதம் தான் ஆடி மாதம்.
சூரியன் சிறப்பான பலனைத் தரக்கூடிய கடகத்தில் சூரியன் இருப்பதால் 12 ராசிகளுக்கு ஏற்படும் பலனைப் பார்ப்போம்.
மேஷம்
ஆடி மாதம் மேஷ ராசிக்கு நிதி நிலை சிறப்பாக அமையக்கூடியதாக இருக்கும். பூர்விக சொத்துக்கள் கிடைப்பதற்கான அமைப்பு உள்ளது. உங்கள் குடும்பம் தொடர்பாக மனதில் சில விஷயங்களை நினைத்து கொந்தளிப்பு மற்றும் மனக் கலக்கம் இருக்கலாம். ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருங்கள்.
ரிஷபம்
நீங்கள் வேலை செய்யும் பணியிடத்திலிருந்து நல்ல பலன்களைப் பெறுவீர்கள். எந்த ஒரு பெரிய பணியையும் தொடங்க விரும்பினால் அது சிறப்பாக செய்து முடிப்பதற்கான, நேரம் உங்களுக்கு முற்றிலும் சாதகமாக இருக்கும். உங்கள் வேலையை முடிக்க கட்டுப்பாட்டுடன் பணிபுரிந்தால், நீங்கள் நினைத்த வெற்றியை எளிதில் அடையலாம்.
மிதுனம்
குடும்பத்தில் சில முரண்பாடான நிகழ்வுகள் நடக்கும். அதனால் மன உளைச்சலையும் சந்திக்க நேரிடும். உங்கள் பணிகளை மேம்படுத்துவதன் மூலமாகவும் முயற்சிகளை முன்னெடுப்பதாலும் லாபத்தைப் பெற்றிடலாம். இந்த மாதத்தில் உடல் வலிமை குறைவாக இருப்பதாக தோன்றும். சிறிய உடற்பயிற்சிகள் மற்றும் ஆரோக்கியமான உணவைக் எடுத்துக் கொள்வது அவசியம்.
கடகம்
ராசியில் சூரியன் சஞ்சாரம் நிகழும் இந்த காலத்தில் உங்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கும். பல வழியில் நற்பலனும், லாபமும் கிடைத்தாலும், திடீர் செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். உங்களின் கெளரவம், சமூக அந்தஸ்து அதிகரிக்கும். உடல் நலனின் கூடுதல் அக்கறை தேவை.
சிம்மம்
சிம்ம ராசி நாதன் சூரியன் கடகத்தில் சஞ்சாரம் செய்வதால் எல்லா விஷயங்களிலும் சற்று கவனமாக இருப்பது நல்லது. சில விஷயங்களால் அலைச்சலும், செலவுகளும் எதிர் கொள்ள வேண்டியிருக்கும்.
கன்னி
கன்னி ராசியினர் பல நற்பலன்களைப் பெற்றிடுவீர்கள். பண வரவாகும். நிதி ரீதியாக வலுவாக இருப்பீர்கள். சொத்து தொடர்பான தடைகள் நீங்கும். அரசுப் பணிகளில் பெரும் லாபம் இருக்கும்.
துலாம்
துலாம் ராசியினர் ஆடி மாதத்தில் நற்பலன்களை அனுபவிப்பர். உங்கள் வாழ்க்கையிலும், வேலை செய்யும் துறையிலும் நிறைய மகிழ்ச்சியையும் முன்னேற்றத்தையும் தரும். அரசு வேலை தேடுபவர்கள் வேலை கிடைப்பதற்கான நல்ல நேரமாக அமையும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியினருக்கு பல சுபமான பலன்களைத் தரக்கூடியதாக இருக்கும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிப்பதோடு, நீங்கள் செய்ய நினைத்த திருப்பணி செய்ய வாய்ப்பு ஏற்படும். உங்கள் வேலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கும். தைரியமும் வலிமையும் அதிகரிக்கும்.
தனுசு
தனுசு ராசிக்கு கலவையான பலன்களைத் தரக்கூடிய காலமாக இருக்கும். நீங்கள் எந்த வேலை மற்றும் வணிகம் செய்பவராக இருந்தாலும், அதில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். கவனக்குறைவால் இழப்புகள் ஏற்படலாம்.
மகரம்
மகர ராசியினர் கவனமாக இருக்க வேண்டிய மாதம். திருமண வாழ்க்கையில் பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம். குடும்ப உறுப்பினர்களுடன் பிரிவினை உண்டாக்கும் பிரச்னைகள் ஏற்படும். பண வரவு சிறப்பாக இருந்தாலும் செலவுகள் அதிகரிக்கும் என்பதால் புத்திசாலித்தனமாகப் பணத்தை செலவிடுங்கள்.
கும்பம்
கும்ப ராசியினர் உங்கள் செயல்களில் வெற்றியைப் பெற கடுமையாக உழைக்க வேண்டியது அவசியம். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.
மீனம்
சூரியனின் நகர்வு மீன ராசிக்கு நல்ல பலனைத் தருவதாக இருக்கும். இந்த நேரத்தில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு நேரம் சாதகமானதாக இருக்கும். கடினமாக உழைப்பதன் மூலம், உங்கள் வேலையில் நீங்கள் நிச்சயமாக முழுமையான வெற்றியைப் பெறுவீர்கள். மனைவியுடன் மகிழ்ச்சியான நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். வயிறு மற்றும் செரிமான பிரச்சினைகளுக்கு ஆளாக நேரிடும் என்பதால், உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வது அவசியம்.