யாழில் கொரோனாவால் 107 மரணங்கள் : 6 ஆயிரம் தொற்றாளர்கள் - யாழ் அரசாங்க அதிபர்..!!!


யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 15 ஆக அதிகரித்துள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு யாழ் மாவட்டத்தில் இதுவரை 107 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக கணபதிப்பிள்ளை மகேசன் மேலும் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கணபதிப்பிள்ளை மகேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்தோடு மாவட்டத்தில் தற்போது 3 ஆயிரத்து 604 குடும்பங்களை சேர்ந்த 10 ஆயிரத்து 603 நபர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post


Put your ad code here