அரிசி சோறு என்றாலே ஆரோக்கியம் குறைவானது என்ற எண்ணம் இன்றைய தலைமுறையினரிடம் அதிகரித்துள்ளது. மேலும் உடல் எடையை பராமரிக்க அரிசி உணவினை தவிர்க்க ஆரம்பித்து விட்டார்கள்.
பாரம்பரிய கைக்குத்தல் அரிசி, சிவப்பரிசி, பழுப்பரிகளை சாப்பிட்டு வந்த போது இருந்த ஆரோக்கியம் இன்றைக்கு இல்லை. காரணம் அரிசியை பாலிஷ் செய்து அதன் சத்துக்களை நீக்கியது இன்று உண்மையாக இருந்தாலும் ஆனால் அரிசி கெடுதல் இல்லை.
அரிசி சாதம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், சில வகையான புற்றுநோய்க்கான வாய்ப்பைக் குறைக்கும் தன்மை உள்ளிட்ட பல்வேறு நன்மைகளைக் கொண்டதாக விளங்குகிறது. இதன் பயன்களை தற்போது தெரிந்து கொள்ளலாம்.
க்ளூட்டன் ஃப்ரீ உணவு
உலகில் அரிசி மற்றும் கோதுமை என இரண்டு முக்கிய உணவுகளை சார்ந்தே மக்கள் உள்ளனர். கோதுமையில் உள்ள க்ளூட்டன் ஒவ்வாமையை ஏற்படுத்தும். இதனால் க்ளூட்டன் நீக்கப்பட்ட கோதுமை மாவு விற்பனைக்கு வரும்.
அரிசியில் இப்படி ஒவ்வாமையை ஏற்படுத்தும் விஷயம் எதுவும் இல்லை. யார் வேண்டுமானாலும் அரிசியை எந்த பயமின்றி சாப்பிடலாம்.
வொர்க் அவுட் செய்பவர்களுக்கு அதிக அளவில் கலோரி தேவைப்படும். அவர்கள் அரிசி உணவை சாப்பிடுவது நல்ல பலனைத் தரும்.
வெள்ளை அரிசிக்கு பதில் சிவப்பரிசியை சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள நார்ச்சத்து உள்ளிட்டவை செரிமானத்தை மேம்படுத்தும். அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடண்ட் ரத்தத்தில் கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பு அளவு அதிகரிக்கச் செய்கிறது.
நல்ல கொழுப்பு அதிகரிப்பதால் இதயம் ரத்த நாள நோய்கள், பக்கவாதம் போன்றவை வருவதற்கான வாய்ப்பு குறைகிறது.
சிவப்பரிசி சாப்பிடுவது ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும். சிவப்பரிசி கிளைசமிக் இன்டெக்ஸ் குறைவு.
எனவே, ரத்தத்தில் சர்க்கரை அளவு வேகமாக அதிகரிப்பது இல்லை. அதில் உள்ள நார்ச்சத்து உள்ளிட்டவை கொஞ்சம் கொஞ்சமாக ரத்தத்தில் சர்க்கரையை கலக்கச் செய்கின்றன. இதன் காரணமாக சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பும் குறைகிறது.
எனவே, ரத்தத்தில் சர்க்கரை அளவு வேகமாக அதிகரிப்பது இல்லை. அதில் உள்ள நார்ச்சத்து உள்ளிட்டவை கொஞ்சம் கொஞ்சமாக ரத்தத்தில் சர்க்கரையை கலக்கச் செய்கின்றன. இதன் காரணமாக சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பும் குறைகிறது.
Tags:
Entertainment