நீரிழிவு நோயை உடனே குணமாக்கும் லவங்கப்பட்டை தண்ணீர் - எப்படி உபயோகிக்கலாம்?


இந்தியாவில் பெரும்பாலான மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர். அதற்கான சிறந்த மருத்துவம் இல்லாமல் இன்னும் இன்னும் நோயாளிகள் பெறுகி வருவது கவலை அளிக்கக்கூடியதாக இருக்கிறது.

இவற்றை தடுப்பதற்காக பல்வேறு முயற்சிகளை நாம் செய்து வருகிறோம், அதில் ஒன்று தான், இலவங்கப்பட்டை ஆகும்.

நாம் மிக சாதாரணமாக இதனை பிரியாணி, குருமா போன்றவற்றில் பயன்படுத்துகிறோம். ஆனால் அது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகுந்த பலனை அளிக்கக்கூடியது ஆகும்.
 
மேலும், இதில் இருக்கக்கூடிய நோய் எதிர்ப்பு தன்மை, ஆன்டி-ஆக்சிடன்ட்கள் உடலின் குளுக்கோஸ் அளவு மற்றும் கொழுப்பின் அளவை கட்டுப்படுத்த நீரிழிவு நோயாளிகளுக்கு உதவுகிறது. இலவங்கம் பட்டையில் இருக்கும் எக்கச்சக்கமான நோய் எதிர்ப்புத் திறன், செரிக்கும் திறன் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலில் குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்துகின்றன.

இதன் விளைவாக உடலின் சுகரின் அளவை கட்டுப்படுத்தி செரிமான பகுதிகளையும் ஊக்குவிக்க முடிகிறது. உலகமெங்கும் பரவி இருக்கக்கூடிய டைப் 2 நீரிழிவு நோயாளிகள் தங்களது உடல் எடையை குறைப்பதற்கும் இதய நோய் போன்றவை வராமல் தடுப்பதற்கும் உடலின் குளுக்கோஸ் மற்றும் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்துவதற்கும் இந்த இலவங்கப்பட்டை பெரிதும் உதவுகிறது.

நமது உணவுகளில் இலவங்கப்பட்டையை பல்வேறு முறைகளை பயன்படுத்த தெரிந்து இருந்தாலும் நாம் இந்த கட்டுரையில் மிக எளிதான ஒரு முறையினை பார்க்க இருக்கிறோம்.

அது இலவங்கப்பட்டை தண்ணீர். இலவங்கப்பட்டையை எடுத்து தண்ணீரில் போட்டு வைத்து ஊற வைத்து காலையில் எழுந்து அதை நன்றாக கொதிக்க வைத்து பின் வெறும் வயிற்றில் குடித்து வாருங்கள்.

இதனை தினமுமே நீங்கள் செய்யலாம். ஆனால் உங்கள் உடல் இலவங்கப்பட்டையினை நுகர்வதற்கு தயாராக இருக்கிறதா இல்லையா என்று தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா? எனவே, உங்களுடைய சிறப்பு மருத்துவரை ஒருமுறை கலந்தாலோசித்துக் கொள்ளுங்கள்.

அதன் பிறகு நீங்கள் இந்த அளப்பரிய ஆற்றல் கொண்ட இலவங்கப்பட்டை தண்ணீரை தாராளமாக குடிக்கலாம்.
Previous Post Next Post


Put your ad code here