செலவே இல்லாம வீட்டிலேயே செய்யலாம் முந்திரி பிஸ்கட்! எப்படி தெரியுமா?


குழந்தைகளுக்கு முந்திரி பிஸ்கட் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே எளிய முறையில் முந்திரி பிஸ்கட் தயார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

மைதா மாவு - கால் கிலோ

பெ.வெங்காயம் - 2 (நறுக்கவும்)

பச்சை மிளகாய் - 5

பேக்கிங் பவுடர் -சிறிதளவு

நறுக்கிய கொத்தமல்லி தழை

கால் கப் பூண்டு - 4 பல்

சீரகப்பொடி - அரை டீஸ்பூன்

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு


செய்முறை

சீரகப்பொடியை சிறு தீயில் வறுத்துக்கொள்ளவும்.
கொத்தமல்லி தழை, வெங்காயம், மிளகாய், பூண்டு ஆகியவற்றை மிருதுவாக அரைத்துக்கொள்ளவும்.
அகன்ற பாத்திரத்தில் மைதா மாவை கொட்டி அதனுடன் அரைத்த விழுது, சீரகப்பொடி, பேக்கிங் பவுடர், உப்பு ஆகியவற்றை சேர்த்து கிளறவும். அதனுடன் சிறிதளவு சூடான எண்ணெய் ஊற்றி மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ளவும்.
பின்னர் சப்பாத்தி பதத்திற்கு தேய்த்து முந்திரி பருப்பு வடிவில் சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் துண்டுகளை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
முந்திரி வடிவத்தில் இருப்பதால் அந்த பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. முந்திரி பிஸ்கட் ரெடி.
Previous Post Next Post


Put your ad code here