சாவகச்சேரிப் பகுதியைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று (25) உயிரிழந்துள்ளார்.
45 வயதான குறித்த நகைக்கடை உரிமையாளர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
இது கடந்த 24 மணித்தியாளங்களுக்குள் தென்மராட்சி பகுதியில் இடம்பெற்ற நான்காவது கொரோனா மரணம் என்பது குறிப்பிடத்தக்கது.