வவுனியாவில் 6 மாத குழந்தை கொரோனா தொற்றால் உயிரிழப்பு..!!!


வவுனியாவில் 6 மாத குழந்தை ஒன்று கொரோனா தொற்றிற்கு பலியாகியுள்ளது.

குறித்த குழந்தைக்கு சுகவீனம் ஏற்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதன்போது மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் போது கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இதனையடுத்து வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி இன்று (26) அதிகாலை மரணமடைந்துள்ளது.

இதேவேளை வவுனியா தோணிக்கல் பகுதியை சேர்ந்த வயதான பெண்மணி ஒருவரும் கொரோனா தொற்றிற்கு இலக்காகி நேற்று இரவு மரணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post


Put your ad code here