கொரோனா மற்றும் டெல்டா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில் எதிர்வரும் வார இறுதியில் பயணத்தடை அல்லது குறுகியகால முடக்கமொன்றை அமுல்படுத்துவது குறித்து அரசு ஆராய்ந்து வருகிறது.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை கொரோனா தடுப்பு செயலணியின் விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளது.இந்த கூட்டத்திற்கு விசேட மருத்துவ நிபுணர்கள் பலர் அழைக்கப்பட்டுள்ளனர்.இங்கு கிடைக்கப்பெறும் ஆலோசனைகள் ,தகவல்களை அடிப்படையாகக் கொண்டு புதிய சுகாதார கட்டுப்பாடுகளை விதிக்க அரசு உத்தேசித்துள்ளது.
முதற்கட்டமாக, திருமண நிகழ்வுகள் , வைபவங்கள் மற்றும் கூட்டங்களை தற்காலிகமாக இடை நிறுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிகிறது. நாட்டின் அனைத்து வைத்தியசாலைகளும் கொரோனா நோயாளர்களால் நிரம்பியுள்ளதால் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த அரசு விரைவு முடிவுகளை எடுக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்
Tags:
sri lanka news