கம்பஹா மாவட்டத்தில் 24 மணிநேரத்தில் 2000 தொற்றாளர்கள்..!!!


கம்பஹா மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா  தொற்றாளர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது என மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

குறித்த மாவட்டத்தில், கடந்த 24 மணித்தியாலங்களில் 2,270 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தின் 15 சுகாதார பிரிவுகளில் தொம்பே சுகாதார பிரிவுகளிலேயே அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். தொம்பே சுகாதார பிரிவில் இன்று காலை வரை 329 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

மஹர பிரிவில் 244 தொற்றாளர்களும், பியகம பிரிவில் 210 தொற்றாளர்களும், வத்தளை பிரிவில் 203 தொற்றாளர்களும், கம்பஹா பிரிவில் 181 தொற்றாளர்களும், மீரிகம பிரிவில் 160 தொற்றாளர்களும், கட்டான பிரிவில் 139 தொற்றாளர்களும், மினுவாங்கொட பிரிவில் 135 தொற்றாளர்களும், திவுலப்பிட்டிய பிரிவில் 133 தொற்றாளர்களும், ராகம பிரிவில் 131 தொற்றாளர்களும், ஜாஎல பிரிவில் 117 தொற்றாளர்களும், களனிய பிரிவில் 113 தொற்றாளர்களும், அத்தனகல்ல பிரிவில் 100 தொற்றாளர்களும், நீர்கொழும்பு பிரிவில் 42 தொற்றாளர்களும், சீதுவ பிரிவில் 33 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.

குறித்த மாவட்டத்தில் ஆடைத் தொழிற்சாலை தொற்றாளர்கள் 66 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க வலயத்தில் 59 தொற்றாளர்களும், பியகம வலயத்தில் 7 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.
Previous Post Next Post


Put your ad code here