படக்குழுவினரைக் கண்கலங்க வைத்த கீர்த்தி சுரேஷ்..!!!


கடந்த 2011ஆம் ஆண்டு தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியாகி சிறந்த படத் தொகுப்புக்கான தேசிய விருதை வென்ற படம் ‘ஆரண்ய காண்டம்’. இதில் உதவி இயக்குநராகவும், நடிகை ரித்திகா சிங்கிற்கு சிறப்பு தேசிய விருது கிடைத்த சுதா கொங்கராவின் ‘இறுதிச்சுற்று’ படத்தில் டயலாக் போர்ஷனையும் எழுதியவருமான இயக்குநர் அருண் மாதேஸ்வரன் ‘சாணிக்காயிதம்’ படத்தை இயக்குகிறார் என்பதால் அந்தப் படத்துக்கான எதிர்பார்ப்புகள் கூடியுள்ளன.

விக்னேஷ் சிவன் - நயன்தாரா தயாரித்த ‘ராக்கி’ படத்தின் இயக்குநரும் அருண் மாதேஸ்வரன் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் ரஜினி நடித்துள்ள அண்ணாத்த படத்தில் அவரது தங்கையாக நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். அதையடுத்து அஜித் நடித்த வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் சிரஞ்சீவியின் தங்கையாக நடிக்கிறார். இதற்கிடையே செல்வராகவனுடன் இணைந்து சாணிக்காயிதம் படத்தில் கீர்த்தி சுரேஷ் அவருக்கு ஜோடியாக நடித்திருப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் தற்போது இந்தப் படத்திலும் செல்வராகவனின் தங்கையாகவே கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார் என்கிற தகவல் கசிந்துள்ளது.

அதோடு அண்ணனாக நடித்துள்ள செல்வராகவனுடன் இணைந்து நடித்துள்ள ஒரு சென்டிமென்ட் காட்சியில் கிளிசரின் போடாமலேயே கண்ணீர் விட்டபடி நடித்து படக்குழுவினரை, படப்பிடிப்பில் கண்கலங்க வைத்து விட்டாராம் கீர்த்தி சுரேஷ். ஆக, ரஜினி, சிரஞ்சீவி மட்டுமின்றி செல்வராகவனுடனும் தங்கை வேடத்தில்தான் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.
Previous Post Next Post


Put your ad code here