வலி.வடக்கில் மீள கையகப்படுத்தப்படும் காணிகள் - நேரில் சென்ற சுமந்திரன்..!!!


கடந்த ஆட்சிக் காலத்தில் வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளை இராணுவத்தினர் மீள கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில் அப்பகுதிகளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் நேரில் சென்று ஆராய்ந்தார்

வலி.வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ. சுகிர்தன் மற்றும் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ச., சுகிர்தன் ஆகியோருடன் இணைந்து இன்றைய தினம் திங்கட்கிழமை அப்பகுதிகளுக்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்தார்.

கடந்த அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்ட காணிகளை இராணுவத்தினர் மீள கையகப்படுத்தும் நோக்குடன் , அக்காணிகளில் "இது இராணுவத்தினருக்கு சொந்தமான காணி" என எழுதிய பலகைகளை நாட்டி யுள்ளனர்.

அதனால் அப்பகுதி மக்களிடம் குழப்பம் நிலவி வந்தது. அத்துடன் இராணுவத்தினர் பலகை நாட்டிய காணி உரிமையாளர்கள் , வலி.வடக்கு பிரதேச சபை தவிசாளர் மற்றும் வலி.வடக்கு பிரதேச செயலர் ஆகியோரிடமும் முறையிட்டு இருந்தனர்.

இந்நிலையிலையே நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அப்பகுதிகளுக்கு நேரில் சென்று ஆராய்ந்துள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here