Tuesday 21 September 2021

கின்னஸ் சாதனை படைத்த உலகின் அதிக வயதான இரட்டை சகோதரிகள்..!!!

SHARE

உலகில் வாழும் அதிக வயதான இரட்டைச் சகோதரிகளாக ஜப்பானைச் சேர்ந்த உமேனோ சுமியமா மற்றும் கூமே கொடமா ஆகிய இருவரும் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளனர்.

ஷோடோஷிமா தீவில் 1913-ஆம் ஆண்டு நவம்பர் 5-ஆம் திகதி பிறந்த இவர்கள் இருவரதும் வயது 107 ஆண்டுகள் 300 நாட்களைக் கடந்துள்ளது.

இதற்கு முன்னரும் ஜப்பானைச் சேர்ந்த இரட்டைச் சகோதரிகளான மறைந்த கின் நரிதா மற்றும் ஜின் கனீ ஆகியோர் சாதனை படைத்திருந்தனர். அந்தச் சாதனையை உமேனோ சுமியமா மற்றும் கூமே கொடமா ஆகியோர் முறியடித்துள்ளனர்.

தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இரு சகோதரிகளும் வெவ்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு கின்னஸ் சாதனைச் சான்றிதழ் அனுப்பி வைக்கப்பட்டது.

முந்தைய சாதனை படைத்த கின் நரிதா 2000 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 107 ஆண்டுகள் மற்றும் 175 நாட்களில் இறந்தார். அடுத்த ஆண்டு ஜின் கனீ 108 வயதில் உயிரிழந்தார். இவர்கள் இருவரும் 1892 ஆம் ஆண்டு ஆகஸ்ட் -01 நாகோயாவில் பிறந்தனர்.

உலகில் சராசரியாக அதிக ஆயுட்காலம் கொண்டவர்களாக ஜப்பானியர்கள் இருப்பது குறிப்பி்டத்தக்கது.
SHARE