மிஷ்கின் இயக்கத்தில் நடித்தது ஏன்?: விஜய்சேதுபதி..!!!


மிஷ்கின் இயக்கும் பிசாசு 2 படம் அறிவிக்கப்பட்ட போது இயக்குநர் படமாக இருந்தது. அந்தப் படத்தில் ஆண்ட்ரியா நடிப்பதாக அறிவிக்கப்பட்டு அதன் முதல் பார்வை வெளியிடப்பட்டது. அதில் ஆண்ட்ரியா நிர்வாணக் கோலத்தில் இருப்பதை பார்த்தபோது ஒன்லி ஆண்களுக்கான படமாக மாற்றம் கண்டது.

விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் பிசாசு - 2 ல் நடிக்கிறார் என கூறப்பட்டபோது வியாபாரத்துக்காக அவரை நடிக்க வைத்திருக்கிறார்கள் என்கிற பேச்சு எழுந்தது. தன் படம் சம்பந்தமான எந்த செய்திக்கும் பதில்கூறாமல் கடந்துபோவது மிஷ்கின் பழக்கம். அது போன்றே பிசாசு - 2 படம் சம்பந்தமாக வெளியான யூக செய்திகளுக்கு அவர் தரப்பில் மறுப்பு இதுவரை வரவில்லை. படத்தின் வியாபாரம் விஜய்சேதுபதியை முன்நிறுத்தி பேசப்பட்டு வருவதால் எத்தனை நாள் நடித்திருப்பார் என்கிற கேள்வி எழுந்தது சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் தோல்வியை தழுவி வருகிறது இந்த சூழ்நிலையில் பிசாசு - 2 படத்தில்தான் இரண்டு நாட்கள் மட்டுமே நடித்திருப்பதாக மறைமுகமாக கூறியிருக்கிறார்.

இது சம்பந்தமாக அவர் கூறியிருப்பதாவது

"சைக்கோ படம் பார்த்தேன், மிஷ்கின் உழைப்பு பிரமாதமாக இருந்தது. படம் ரொம்ப பிடிச்சிருந்தது. ஒவ்வொரு ஷாட்டிலும் கதை சொல்லியிருந்தார். ஒரு நாள் யதேச்சையாக போனில் கூப்பிட்டேன். வாங்க பேசலாம் என்றார், போனேன். அவர் பேச பேச எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.

நான் ஓசோவோட டிராவல் பண்ணினேன் என்றார். என்னடா டிராவல் இது அவர் படம்தானே பண்றார் என்று நினைத்தேன். 8 மணி நேரம் அவருடன் பேசிய பிறகுதான் அவரை புரிந்து கொள்ள முடிந்தது.

பிசாசு கதை கேட்டேன். அந்த கதை ரொம்ப ஆழமாக இருந்தது. படத்தோட கேரக்டர்களை உருவாக்கி வைத்திருந்த விதம் பிரமிக்க வைத்தது. எனக்கு ஏதாவது கொடுங்க ஒரு இரண்டு நாள் பண்ணிக் கொடுக்கிறேன் என்றேன் அப்படித்தான் பிசாசு - 2 படத்தில் நடித்தேன் இந்தபடத்தில் பணியாற்றியது பல விஷயங்களை அவரிடம் இருந்து கற்றுக் கொள்வதற்காகத்தான்" என கூறியுள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here