
மேல் மாகாணத்தில் பொலிஸார் முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கையில் 1,156 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (02) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையில் மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களில் 531 பேர் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் கைது செய்யப்பட்ட நபர்களில் 54 பேர் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Tags:
sri lanka news