தம்புள்ள, கலோகஹஎல பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 14 வயது சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 6 ஆம் திகதி உயிரிழந்த சிறுமியின் பக்கத்து வீட்டில் உள்ள ஒருவர் கல்வி நடவடிக்கைகளுக்காக குறித்த சிறுமியை மோட்டார் சைக்கிள் ஒன்றில் அழைத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் தனது மகள் வீட்டிற்கு திரும்பாத காரணத்தினால் கடந்த 7 ஆம் திகதி குறித்த நபரின் வீட்டிற்கு சிறுமியின் பெற்றோர் சென்ற சந்தர்ப்பத்தில் அங்கு யாரும் இல்லாததால் அவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனை அடுத்து சிறுமியை அழைத்து சென்ற குறித்த நபரின் வீட்டை பரிசோதனை செய்த சந்தர்ப்பத்தில் அங்கு கட்டில் ஒன்றின் மீதிருந்த குறித்த சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பான சந்தேக நபர் மற்றும் அவரது மனைவி குறித்த பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Tags:
sri lanka news