பதுளை - லுணுகலை வீதியில் பசறை பிரதேசத்தில் கடந்த மார்ச் 20ஆம் திகதி விபத்துக்குள்ளான பேருந்தின் சாரதி திடீரென உயிரிழந்துள்ளார்.
தனது வீட்டில் இருந்த சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக அவர் புத்தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதன்பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக வெல்லவாய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இவ்வாறு வெல்லவாய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மாரடைப்பு ஏற்பட்டமை உயிரிழப்புக்கான காரணம் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபருக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போது கொரோன தொற்று உறுதிப்படுத்தப்படாததை அடுத்து அவரது சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பதுளை − பசறை பகுதியில் கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி, கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பயணிகள் பஸ், பள்ளமொன்றில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியது.
குறித்த விபத்தில் ஐந்து சிறுவர்கள், 13 பெண்கள் உட்பட 33 பேர் விபத்தில் காயம்டைந்தமை குறிப்பிடத்தக்கது.
Tags:
sri lanka news