கொரோனாவுக்கு மேலும் 18 பேர் பலி..!!!




நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 18 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.

குறித்த அனைவரும் நேற்றைய தினம் (23) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,611 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 535,962 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 503,090 ஆக அதிகரித்துள்ளது.
Previous Post Next Post


Put your ad code here