கோவிட்-19 தொற்று உள்ள சிலருக்கு 90 முதல் 180 நாள்களுக்கு அறிகுறிகள் இருக்கலாம்..!!!


கோவி-19 நோய்த்தொற்று உள்ள சிலருக்கு 90 முதல் 180 நாட்கள் வரை அறிகுறிகள் இருக்கலாம் என்று ஒரு புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மூச்சுத் திணறல் – மன அழுத்தம் – தலைவலி – தசை வலி – தொண்டை வலி போன்ற அறிகுறிகள் இருக்கலாம் என்று ஸ்ரீ ஜெயவர்த்தனபுரா பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு, ஒவ்வாமை மற்றும் நுண் உயிரியல் துறை பணிப்பாளம், மருத்துவர் சந்திம ஜீவந்தரா சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுதொடர்பில் அவர் வெளியிட்ட கீச்சகப் பதிவில், “இவற்றில் மன அழுத்தம் போன்ற அறிகுறிகள் 15 சதவிகிதம் வரை இருக்கும், மற்ற அறிகுறிகள் 1.5 முதல் 8 சதவிகிதம் வரை அதிகமாக இருக்கும்.

இந்த அறிகுறிகள் கோவிட்-19 நோய்த்தொற்றுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களிடையே அதிகம் காணப்படுவதாகவும், அவர்களில் பெரும்பாலோர் பெண்கள்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Previous Post Next Post


Put your ad code here