சீனாவின் கடும் வெள்ளத்தினால் 2 மில்லியன் பெயர் இடம்பெயர்வு..!!!


சீனாவின் வடக்கு ஷாங்க்சி மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் 17.6 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.

கடந்த வாரம் பெய்த பலத்த மழையால் இந்த மாகாணத்தில் 70 க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் மற்றும் நகரங்களில் வீடுகள் இடிந்தும் மண்சரிந்தும் கடுமையான சேதம் ஏற்பட்டது.

கனமழையால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மஞ்சள் நதியின் ஒரு பகுதியில் அணை உடைவதைப் பாதுகாக்க மீட்புப் பணியாளர்கள் போராடி வருகின்றனர்.ஹெனான் மாகாணத்தில் தீவிர மழை பெய்து 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த மூன்று மாதங்களுக்குள் மீண்டும் ஒரு துயரத்தை சீனா சந்தித்துள்ளது.

ஷாங்க்சி மாகாணம் முழுவதும் 17,000 வீடுகள் இடிந்து விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 200,000 ஹெக்டர் விளைநிலம் பாழாகிப் போனது. நிலச்சரிவின் காரணமாக நான்கு பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்துவிட்டதாக அரசு நடத்தும் குளோபல் டைம்ஸ் இதழ் கூறுகிறது.
Previous Post Next Post


Put your ad code here