
மூன்றரை வயதுடைய சிறுவனை பயன்படுத்தி போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட குழுவினர் மேல் மாகாண புலனாய்வுப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வேவல்தெணிய பிரதேசத்தில் நேற்று அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களுள் சிறுவனின் தாயும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்படும் போது சிறுவனின் உடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 06 கிராம் போதை மருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Tags:
sri lanka news