வழிபாட்டுதலங்களில் சமய அனுஸ்டானங்கள் மற்றும் விசேட வழிபாடுகளுக்கான தினங்களில் 50 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் குறித்த சந்தர்ப்பங்களில் உரிய சுகாதார வழிகாட்டல்கள் பின்பற்றப்பட வேண்டும்.
ஏனைய நாட்களில் தனித்தனியாகச் சென்று மக்கள் வழிபாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட முடியும்.
விசேட பூஜை தினங்களில் மாத்திரமே இவ்வாறு 50 பேர் வரை ஒன்று கூடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
Tags:
sri lanka news