Sunday 17 October 2021

பால்மா விலை அதிகரிப்பிற்கு முன் 550 ரூபாவில் விற்பனைக்கு வந்த பால்மா பைக்கற்று பிண்ணனி என்ன?

SHARE

நாட்டில் பால்மாவின் விலை அதிகரிக்கப்படும் முன் பால் மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம்

JVP Government 2024 என்ற பேஸ்புக் பக்கத்தில் ” கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டது 7ம் திகதி ஆனால் பொதி செய்யப்பட்ட திகதி 1 திகதி. “ என இம் மாதம் 09 ஆம் திகதி 09.10.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது போன்று மேலும் பலர் பகிர்ந்துள்ளமை காணக்கிடைத்தது.

 உண்மை அறிவோம்

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

இணையத்தில் வைரலாகும் 400 கிராம் பால் மாவின் விலை 550 ரூபாவாக அச்சிடப்பட்ட ஒரு மேல் அட்டை படம் குறித்து நாம் Fonterra நிறுவனத்தின் விற்பனை முகவரிடம் இது குறித்து வினவியபோது, இது கிறீம் சுவைமிக்க உணவு பானம் என்ற ரத்தியின் புதிய பால் பைக்கற்று ஒன்றின் விலை என தெரிவித்தனர்.

குறித்த பால்மா, புதிதாக சந்தைக்கு Fonterra நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இதில், புதிதாக கிறீம் சுவை சேர்க்கப்பட்டுள்ளதாக அவர்கள் எமக்கு விளக்கமளித்தனர்.


மேலும், பால்மாவின் விலை அதிகரிப்பு அறிவிக்கப்படுவதற்கு முன்னர் பொதி செய்யப்பட்ட 400 கிராம் முழு ஆடைப் பால்மாவின் விலை அப்போதைய நிர்ணயிக்கப்பட்டிருந்த 380 ரூபாவில் தான் இருக்கும் என்று தெரிவித்தார். குறித்த கிறீம் சுவைமிக்க உணவு பானமானது ஆரம்பம் முதல் 550 ரூபாவில் தான் காணப்படுவதாக, எமக்கு தெரியப்படுத்தினர்.

டுவிட்டர் கணக்கில் குறித்த ரன் முசுவ சந்தையில் விற்பனைக்கு வந்துள்ள புகைப்படமும் பதியப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

கடந்த 8 ஆம் திகதி முதல் பால் மாவின் நிர்ணயிக்கப்பட்ட விலை அதிகரிக்கப்பட்டிருந்தமை நாம் அனைவரும் அறிந்திருந்ததே. எனினும் ரத்தி நிறுவனத்தின் புதிய உற்பத்தியினை புதிய விலை நிர்ணயத்திற்கு முன்னர் சந்தையில் முழு ஆடை பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக கருத்தினை வெளியிட்டு தகவலினை பகிர்ந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், பால் மாவின் விலை அதிகரிப்பிற்கு முன் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது என பகிரப்படும் புகைப்படம் முற்றிலும் போலியானது என கண்டறியப்பட்டுள்ளது.

srilanka.factcrescendo

SHARE