நுவரெலியா ராகலை தோட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் உள்ளிட்ட ஐவர் தீயில் எரிந்து உயிரிழந்துள்ளனர்.
நேற்றிரவு 10.30 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தீ விபத்தில் உயிரிழந்த ஒரு வயது குழந்தையின் பிறந்தநாள் நேற்றைய தினம் குறித்த வீட்டில் கொண்டாட்டப்பட்டுள்ளது. அதன் பின்னரே வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அதில் ஒரு வயது குழந்தை , 11 வயது சிறுவன் , இரு பெண்கள் உள்ளிட்ட ஐவரே உயிரிழந்துள்ளனர்.
அதேவேளை அவ்வீட்டில் வசிக்கும் 35 வயது இளைஞன் , விபத்து ஏற்படுவதற்கு சற்று முன்னர் வீட்டில் இருந்து வெளியே சென்றமையால் உயிர் தப்பியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் ராகலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Tags:
sri lanka news