இலங்கையில் முதல் முறையாக ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகள்..!!!


நாட்டில் முதல் முறையாக ஆறு குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிறந்த சம்பவம் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் இன்று அதிகாலை பதிவாகியுள்ளது.

31 வயதுடைய பெண்ணொருவரே இன்று அதிகாலை 12.16 க்கும் 12.18 க்கும் இடைப்பட்ட கால இடைவெளியில் சிசேரியன் முறை மூலம் மூன்று பெண் மற்றும் மூன்று ஆண் குழந்தைகளையும் ஈன்றெடுத்துள்ளார்.

தாய்மாரும், பிறந்த குழந்தைகளும் தற்சமயம் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளதாக வைத்தியசாலையில் மகப்பேறு மருத்துவர் மற்றும் மகளிர் மருத்துவ நிபுணர் திரான் டயஸ் கூறுயுள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here