நல்லூர் கந்தசுவாமி ஆலய பத்தாவது நிர்வாக அதிகாரியான குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாரின் நினைவாக 92 பனை வித்துக்கள் நடாத்தப்பட்டன.
குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியார் கடந்த 09ஆம் திகதி தனது 92ஆவது வயதில் காலமானார்.
அந்நிலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நல்லூர் சைவத்தமிழ் பண்பாட்டு கலைக்கூடத்தினரின் ஏற்பாட்டில் , அன்னாரது 92ஆவது அகவையை குறிக்கும் முகமாக செம்மணியில் அமைந்துள்ள நல்லூர் வரவேற்கும் அலங்கார வளைவில் இருந்து செம்மணி வீதியின் இரு மருங்கிலும் 92 பனை வித்துக்கள் நாட்டப்பட்டன.
படங்கள்: ஐ.சிவசாந்தன்