எல்லை தாண்டி மீன் பிடித்த இலங்கை மீனவர்களுக்கு வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 21ந் திகதி இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் வல்வெட்டித்துறையில் இருந்து மீன்பிடிக்க புறப்பட்ட நிமலதாஸ், கஜிபன் ஆகிய இருவரும் இந்திய எல்லைக்குள் கோடியக்கரை அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தெரிவித்து அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படையினர் நேற்று மாலை கைது செய்து இரவு நாகப்பட்டினம் கடற்படை முகாமுக்கு அழைத்து வந்தனர்.
பின்னர் மீனவர்களை இன்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் வழக்கை விசாரித்த நீதிபதி மீனவர்களை வரும் 1ஆம் திகதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து மீனவர்கள் இருவரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Tags:
sri lanka news