நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் என காவல்துறையின் ஊடகப்பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
அதன்படி, குளியாபிட்டிய - மாதம்பை பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் விபத்துக்கு உள்ளாகி உள்ளது.
இச்சம்பவத்தில் குளியாபிட்டிய பகுதியை சேர்ந்த 70 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன் இப்பலோகம காவல்துறை பிரிவிற்குட்பட்ட கல்னேல வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதியுள்ளது.
சம்பவத்தில் கலாகபரூவ பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும், கிரியுல்ல - குருணாகல் வீதியில் பேருந்து ஒன்று பாதசாரி ஒருவர் மீது மோதி விபத்துக்குள்ளாகியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்துடன் தொடர்புடைய சந்கேத்தில் பேருந்தின் ஓட்டுனர் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Tags:
sri lanka news