அமெரிக்கா செல்ல காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி..!!!


அமெரிக்கா நவம்பர் மாதத்தில் இருந்து வெளிநாட்டு பயணிகளுக்காக தன் எல்லைகளை திறக்கவுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக பிரிட்டன், ஐரோப்பிய யூனியன் மற்றும் பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவினுள் வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுவதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் பிற நாடுகளில் இருந்து அமெரிக்கா வருவோர் இரு தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும்.

அதோடு, பயணத்திற்கு 3 நாட்கள் முன்பாக எடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதற்கான சான்றிதழை வைத்திருப்பது அவசியம்.

மேலும் அவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள் குறித்த விவரங்களை தர வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் குழந்தைகளுக்கு இத்தகைய கட்டுப்பாடுகள் பொருந்தாது எனவும் அமெரிக்கா அறிவித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலிலும், அதிக உயிரிழப்புக்களை பதிவு செய்த நாடாகவும் அமெரிக்கா விளங்குகின்றது.

இதேவேளை, அவுஸ்திரேலிய நாடும் எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் சர்வதேச பயணிகளுக்கு எல்லைகளை திறக்கவுள்ளதாக அந்நாட்டடு பிரதமர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post


Put your ad code here