கென்யாவில் முக்கிய பேச்சுக்களில் ஈடுபட்டுள்ள நாமல்..!!!




கென்யா சென்றுள்ள அமைச்சர் நாமல்(Namal Rajapaksa) முக்கிய பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளார். அந்நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சர் நஜிப் பலாலா(Najib Balala) மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கலாநிதி அமீனா முகமது(Amina Mohammed) ஆகியோருடன் பேச்சில் ஈடுபட்டார்.

உலகளாவிய தொற்றுநோயான கொரோனாவால் உலக சுற்றுலா துறை கடுமையாக பாதித்துள்ளது. உலக அளவில் நாம் சுற்றுலாத்துறையை புத்துயிர் பெற ஒருங்கிணைந்த முயற்சி செய்வது அவசியம். கென்யாவின் சுற்றுலாத் துறையை புதுப்பிக்கும் முயற்சிகள் பாராட்டத்தக்கவை. எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலாவை ஊக்குவிக்க நாங்கள் எதிர்பார்க்கிறோம் என அமைச்சர் நாமல் கென்ய நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சரிடம் தெரிவித்தார்.

அதேபோன்று இலங்கை மற்றும் கென்யா இடையே விளையாட்டுத்துறை சார்ந்த வளங்கள் மற்றும் வீரர்களின் அனுபவங்களை பகிர்ந்து, இணைந்து பணியாற்ற இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். கென்ய விளையாட்டுத்துறை அமைச்சர் கலாநிதி அமீனா முகமது அவர்களுடன் ஒத்துழைப்புடன் செயற்பட்டு, குறிப்பாக இலங்கையின் தடகள விளையாட்டு வீரர்களின் திறன்களை மேலும் மேம்படுத்த நாங்கள் எதிர்பார்க்கிறோம் எனவும் குறிப்பிட்டார்.
Previous Post Next Post


Put your ad code here