கிளிநொச்சி ஏ9 வீதி தனியார் வங்கி முன்பாக இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த முதியவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இன்று (30) கிளிநொச்சி ஏ9 வீதியில் தனியார் வங்கி முன்பாக குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் கிளிநொச்சி ஸ்கந்தபுரம் பகுதியை சேர்ந்த 75 முதியவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பாதசாரி கடவையில் ஏ9 வீதியை கடக்க முற்பட்ட போது டிப்பர் வாகனம் ஒன்று குறித்த முதியவரை மோதியதில் இவ் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது
விபத்தில் குறித்த முதியவரின் கால் துண்டாடப்பட்டுள்ளதுடன், தலைப்பகுதியிலும் பாரிய அளவிலான பாதிப்பு ஏற்பட்ட நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
Tags:
sri lanka news