மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டை நீக்க தீர்மானம்!

 


மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி அதிகாலை 4 மணி முதல் நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய கொவிட் பரவல் நிலைமையை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.

நாட்டில் நேற்றைய தினம் (21) வரையில் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரையில் நீடிக்க நேற்று தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post


Put your ad code here