தம்பகல்ல பொலிஸ் பிரிவின், உடுமுல்ல பிரதேசத்தின் கஹடபிடிய வாவியில் நீராட சென்ற சிறுவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
சிறுவர்கள் இருவரும் மீட்கப்பட்டு மடுல்ல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.
14 வயதுடைய கொல்லாதெணிய, தம்பகல்ல பிரதேசத்தை சேர்ந்த சிறுவர்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சடலங்கள் மடுல்ல பிரதேச வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், தம்பல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
sri lanka news