அம்பன்பொல தெற்கு கிராம உத்தியோகத்தர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கல்கமுவ ரயில் நிலைய உதவி பொறுப்பதிகாரி 04 பிற்பகல் கல்கமுவ பொலிஸில் சரணடைந்துள்ளார்.
குறித்த கொலை சம்பவத்துடன் தனக்கு தொடர்புள்ளதாக வாக்குமூலம் வழங்கி அவர் இவ்வாறு பொலிஸில் சரணடைந்துள்ளார்.
கிராம உத்தியோகத்தருடன் தனக்கு ஏற்பட்ட காணித் தகராறு காரணமாக பழிவாங்குவதற்காக அவரை தாக்கி அச்சுறுத்துமாறு வேறு தரப்பினருக்கு பணம் வழங்கியிருந்தாக அவர் பொலிஸில் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
அதன்படி, சந்தேகநபர் மஹவ மாவட்ட நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
Tags:
sri lanka news