இலங்கையில் துப்பாக்கி வைத்திருப்போருக்கு பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அவசர செய்தி..!!!




2022 ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி அனுமதிப் பத்திரங்களை புதுப்பிப்பதற்கான திகதிகளை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கமைய, 2021ஆம் ஆண்டு டிசம்பர் 1ம் திகதி முதல் 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி 28ம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் துப்பாக்கி அனுமதிப்பத்திர உரிமையாளர்கள் மற்றும் நிறுவனங்கள் 2022ஆம் ஆண்டுக்கான தங்கள் துப்பாக்கி அனுமதிப் பத்திரங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

துப்பாக்கி அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வதற்காக வழங்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்த பின்னர் துப்பாக்கி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட மாட்டாது என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, புதுப்பிக்கப்படாத துப்பாக்கி அனுமதிப் பத்திரத்தையுடைய துப்பாக்கியினை தன் வசம் வைத்திருப்பது துப்பாக்கி கட்டளைச் சட்டத்தின் 22வது சரத்துக்கமைய தண்டனைக்குரிய குற்றமாகும்.
Previous Post Next Post


Put your ad code here