நெல்லிற்கான விலை தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

 


எதிர்வரும் பெரும்போகத்தில் ஒரு கிலோ நெல்லிற்கு 70 ரூபா விலையை நிர்ணயிக்க ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.


கரிம உர பாவனையினால் ஏற்படும் பயிர் சேதங்களுக்காக வழங்கப்படும் நட்டஈடு தொடர்பில் சுற்றறிக்கை ஒன்றை வௌியிடும் வரையில் பயிர்ச் செய்கையில் இருந்து விலகிக் கொள்வதாக விவசாயிகள் போராட்ட மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

​மெதிரிகிரிய, கவுடுல்ல பகுதியில் உள்ள விவசாயிகள் இம்முறை பெரும்போகத்திற்கு அரசாங்கத்தின் அறிவுறுத்தலின் அடிப்படையில் கரிம உரத்தை உற்பத்தியை ஆரம்பித்துள்ளனர்.

எவ்வாறாயினும் குறித்த உரம் இதுவரையில் உக்காத காரணத்தினால் விவசாய நடவடிக்கைகளுக்கு அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Previous Post Next Post


Put your ad code here