நாட்டில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கும் நிலையை ஏற்படுத்த வேண்டாம் என மக்களுக்கு சுகாதாரப் பிரிவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன் மக்களின் கவனயீனமான நடவடிக்கையினால் எதிர்காலத்தில் கொவிட் தொற்றாளார்களின் எண்ணிக்கை அதிகரித்தால் தேவையற்ற விதத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஆகவே தயவு செய்து சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மாகாண கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காலத்தில் பலர் சுற்றுலா சென்றுள்ளதை அவதானிக்க கூடியதாக இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
Tags:
sri lanka news