Wednesday 13 October 2021

இலஞ்சம் பெற்ற வனப் பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது..!!!

SHARE



அனுமதிப்பத்திரம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ஒருதொகை மரக்கட்டைகளை விடுவிப்பதற்காக 20 ஆயிரம் ரூபாவை லஞ்சமாகப் பெற்ற வனப் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் நேற்று (12) ஆண்டிக, புத்திகம பகுதியில் வைத்து இலஞ்ச ஊழல் ஒழிப்புத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் மாவட்ட வன அலுவலகத்தின் மஹாகும்புக்கடவல வன பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், ஆண்டிகம பகுதியில் அனுமதிப்பத்திரம் பெறாமல் நடத்தப்பட்டு வரும் மரக் கொட்டகை ஒன்றுக்கு அனுமதிப்பத்திரம் பெறாமல் லொறி ஒன்றில் இவ்வாறு மரக்கட்டைகளை எடுத்துச் சென்றபோது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பின்னர், மரக் கட்டைகளை கொண்டு சென்ற குறித்த லொறியின் அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொண்ட வனப் பாதுகாப்பு உத்தியோகத்தர், லொறியையும், அனுமதிப்பத்திரம் பெறாமல் கொண்டு சென்றதாக கூறப்படும் மரக்கட்டைகளையும் விடுவித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

இதனையடுத்து, இந்த வழக்கு விசாரணையில் இருந்து சந்தேக நபரை விடுவிப்பதற்காக 20 ஆயிரம் ரூபாவை வன பாதுகபாப்பு உத்தியோகத்தர் இலஞ்சமாக கோரியதாகவும், அதனை சந்சேக நபர் ஆண்டிக, புத்திகம பகுதியில் வைத்து வழங்கிய பின்னர் இலஞ்ச ஊழல் ஒழிப்புத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்
SHARE