ஹொரணை - கொழும்பு வீதியில் கொஹூவல சந்தியில், பொது போக்குவரத்து பஸ்களைத் தவிர ஏனைய வாகனங்களின் போக்குவரத்துக்களை மட்டுப்படுத்த வீதி அபிவிருத்தி அதிகாரசபை தீர்மானித்துள்ளது.
அதன்படி இன்று முதல் டிசம்பர் 20 ஆம் திகதி வரை அந்த பாதையின் ஊடாக போக்குவரத்து நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
கொஹூவல மேம்பால நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்படுவதினால் வாகனப் போக்குவரத்துக்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் வாகன சாரதிகள் முடிந்தவரை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை கேட்டுக்கொண்டுள்ளது.
Tags:
sri lanka news