பட்டப்பகலில் இளைஞரின் இரு கைகளும் துண்டிக்கப்பட்ட கொடூர சம்பவம்..!!!


பண்டாரகம – வல்கம வீட்டுத் தொகுதியை அண்மித்து முச்சக்கரவண்டியில் இருந்த இரண்டு நபர்கள் மீது நேற்று 17) முற்பகலில் கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்தத் தாக்குதலில் ஒருவரின் இரண்டு கைகளும் துண்டிக்கப்பட்டுள்ளது.

மற்றையவரின் இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு காயமடைந்தவரே சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்தார்.

தாக்குதலில் பலத்த காயமடைந்தவர் வல்கம மயானத்தின் முன்பாக வீழ்ந்து கிடந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

இது போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
Previous Post Next Post


Put your ad code here