சீமெந்தை இறக்குமதி செய்யும் பல நிறுவனங்கள் இறக்குமதியை இடைநிறுத்தியமையே சீமெந்து தட்டுப்பாட்டுக்கு முக்கிய காரணம் என இலங்கையின் முன்னணி சீமெந்து நிறுவனமொன்றின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
டொலர் தட்டுப்பாடு காரணமாக வங்கிகளில் கடன்களை பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால், சீமெந்து இறக்குமதியில் இருந்து நிறுவனங்கள் பின்வாங்குவதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
இலங்கையின் சீமெந்துத் தேவையில் 60 வீதம் இலங்கையில் உற்பத்தி செய்யப்படுவதாகவும் எஞ்சிய 40 வீதம் இறக்குமதி செய்யப்படுவதாகவும் தெரிவித்த அவர், தற்போது சீமெந்து இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் மாதாந்தம் கூடுதலாக 10,000 மெற்றிக் தொன்களை இறக்குமதி செய்ய முடிந்தால் இந்நிலைமையைத் தவிர்க்க முடியும் என்றார்.
உள்ளூர் சீமெந்து உற்பத்தி மாதமொன்றுக்கு 150,000 மெட்ரிக் தொன்னைத் தாண்டுவதாகக் கூறிய அவர், பாரிய அளவிலான கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் சீமெந்தை பதுக்குவதால் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.
மாதாந்தம் 30,000 மெற்றிக் தொன்களுக்கும் அதிகமான சீமெந்து இறக்குமதி செய்யப்படுவதாகவும், இறக்குமதி செய்யப்படும் சீமெந்தின் அளவு சுமார் 50,000 மெற்றிக் தொன்களாக இருந்தால் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கட்டுப்பாட்டு விலையை நீக்கியதன் மூலம் 50 கிலோ எடையுள்ள சீமெந்து மூடை ஒன்றின் விலையை அரசாங்கம் அண்மையில் 93 ரூபாவினால் உயர்த்திய போதிலும், இன்னமும் கடுமையான சீமெந்து தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
சீமெந்து தட்டுப்பாட்டால் சிறிய அளவிலான கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களும், இத்தொழிலில் அன்றாடம் வேலை செய்பவர்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
Tags:
sri lanka news