கொரோனா பரவலால் நிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவைகள் மாகாணங்களுக்குள் மாத்திரம் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படுகிறது.
இதற்கமைய, 133 ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளதாக ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
பருவச் சீட்டு வைத்திருப்பவர்கள் மாத்திரமே இன்று முதல் ரயில்களில் பயணிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
எனினும், மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் இடம்பெறாது எனவும் தெரிவித்துள்ளார்.
Tags:
sri lanka news