Sunday 17 October 2021

கிழக்கில் முதற்கட்டமாக திறக்கப்படவுள்ள பாடசாலைகள்..!!!

SHARE



எதிர்வரும் 21 ஆம் திகதி 200க்கும் குறைவான மாணவர்களை கொண்ட பாடசாலைகளை ஆரம்பிக்கும் திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் 168 பாடசாலைகள் திறக்கப்பட உள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்தார்.

அதனை முன்னிட்டு நேற்று (15) திருகோணமலை நான்காம் கட்டை சுமேதங்கரபுர வித்தியாலயத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் சிரமதானம் நடைபெற்றது.

பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு 2 வாரங்களின் மாணவர்களது உளவியல் தொடர்பான செயற்பாடுகளை விருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் இது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கி உள்ளதாகவும்; கிழக்கு மாகாண ஆளுநர் மேலும் தெரிவித்தார் .

பாடசாலை செயற்பாடுகளை சுமுகமான முறையில் மேற்கொள்வதற்கு தேவையான ஒத்துழைப்புகளை அரசாங்க அதிபர் என்ற அடிப்படையில்தான் வழங்குவதற்கு தயாராக இருப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோரள தெரிவித்தார்.

தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு இதன்போது தெமோமீட்டர் கருவிகளும் ஆளுநரினால் வழங்கப்பட்டன.

சிரமதான நிகழ்வில் திருகோணமலை நகர சபை தவிசாளர், திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை தவிசாளர், கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ,திருகோணமலை வலயக்கல்விப் பணிப்பாளர் ,அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.
SHARE